எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு


மட்டக்களப்பு மாவட்டத்தில் அனர்த்த நிலைமைகளுக்கு அவசியமான நிவாரண பாதுகாப்பு, உணவு,  மற்றும் அத்தியாவசிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கடும் மழை காரணமாக 19,900 குடும்பங்களைச் சேர்ந்த 49,123 பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

 இவர்களில் 2558 குடும்பங்களை சேர்ந்த 7241 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 56 பாதுகாப்பு நிலையங்களிலே அமர்த்தப்பட்டுள்ளன. அத்துடன், உறவினர் வீடுகளில் 11,890 குடும்பங்களை சேர்ந்த 30, 541 பேர் இடம் பெயர்ந்து உள்ளனர்.

அது மட்டும் இல்ல மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.


இவர்களுக்காக இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை ஆகிய பிரிவினர் எங்களுக்கு பெரிதும் உதவி செய்து வருகிறார்கள்.

 தூர இடங்களில் சிக்கிய மக்களை அவர்கள் பாதுகாப்பாக அவர்களுடைய இருப்பிடங்களுக்கு கொண்டு வந்து  இருக்கிறார்கள்.

 தற்போது வாழைச்சேனை பிரதேசத்தில் மீன் பிடிக்க சென்ற மூன்று நபர்களை மீட்க வேண்டியதாகக் கோரப்பட்டுள்ளது.


அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் மற்றும் கடற்படையினர் இணைந்து தற்போது செயற்படுகிறார்கள்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours