( காரைதீவு நிருபர் சகா)
கிழக்கு
மாகாணத்தில் முதலிடம் பெற்ற “சாதுரிய காக்கையார்” என்ற நாடகத்தில் நடித்த
கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரி மாணவர்கள் பாராட்டி
கௌரவிக்கப்பட்டார்கள்.
கல்முனை கார்மேல் பற்றிமா
தேசிய கல்லூரி ஆசிரியர் சிவகுரு நந்தகுமாரினால் தயாரிக்கப்பட்ட “சாதுரிய
காக்கையார்” என்ற தலைப்பிலான நாடகமானது மாகாணத்தில் முதலிடம் பெற்றது.
இந் நாடகம்
அண்மையில் கொழும்பில் மருதானை ரவர் மண்டபத்தில் (Tower Hall) நடைபெற்ற தேசிய ரீதியிலான இறுதிப் போட்டியில் கலந்து கொண்டது.
அப்
போட்டியில் கலந்து கொண்டு போட்டியிட்ட 40 நாடகங்களில் முதல் 10 நாடகங்கள்
தெரிவு செய்யப்பட்டன. அந்த பத்து நாடகங்களுள் ஒன்றாக கல்முனை கார்மேல்
பற்றிமாகல்லூரி நாடகமும் தெரிவானது.
கிழக்கு
மாகாணத்தில் முதலிடத்தை பெற்றுக் கொண்ட இந் நாடகத்தில் பங்குபற்றிய
மாணவர்களைக் கௌரவித்து சான்றிதழ்கள் நினைவுச் சின்னங்களை வழங்கும் விழா
நேற்று முன்தினம் (29) செவ்வாய்க்கிழமை கல்லூரியில் நடைபெற்றது.
கல்லூரி
அதிபர் அருட் சகோதரர் எஸ்.இ.றெஜினோல்ட் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில்
பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன் கலந்து
சிறப்பித்தார்.
கௌரவ
அதிதிகளாக கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ், அம்பாறை
மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி.எம்.றின்சான், கல்முனை பிரதேச கலாசார
அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி தயாளினி விக்னகுருபரன் ஆகியோர் கலந்து
கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours