பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய பொறுப்பு பள்ளிவாசல் நிருவாகிகளுக்கு உள்ளது.


நம்பிக்கையாளர்களினூடாகவே அதனை உடனடியாக நிறைவேற்றவும் 

முஸ்லிம் சமய திணைக்களப் பணிப்பாளர் நவாஸ் வேண்டுகோள் 


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்குவது சம்பந்தமாக நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்கள் / நம்பிக்கைப் பொறுப்பாளர்களுக்கும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்து கடிதமொன்றை (29) இன்று வெள்ளிக்கிழமை அனுப்பி வைத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பாதிப்பால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வகையில் பள்ளிவாசல்கள், பொது நிறுவனங்கள் என்ற வகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவிகள் வழங்க வேண்டிய பொறுப்பும் பள்ளிவாசல் நிருவாகிகளுக்கு உள்ளது.

குறிப்பாக, மேற்படி உதவி நடவடிக்கைகளை பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள் பள்ளிவாசல்களினூடாகவே மேற்கொள்ள வேண்டும் என இலங்கை வக்பு சபையும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் தெரிவித்துள்ளது.

எனவே, பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களினூடாகவே இப்பணிகளை மேற்கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றேன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours