2024 இல் கிழக்கில் கல்வியமைச்சினால்  திருகோணமலையில் நடாத்தப்பட்ட - அகில இலங்கை இசை நடனப் போட்டி மூதுர் கல்விவலயத்திற்குட்பட்ட மல்லிகைத்தீவு மகாவித்தியாலயத்தில்  தரம் 6 இல் கல்விபயிலும் மாணவன் இராசேந்திரன் வினோதினி தம்பதிகளின் மகன்  கரிஸ்நாத் தேசியமட்டத்தில் இரண்டாம் இடம்பெற்று சாதனை படைத்துள்ளதாக அதிபர் சி.கணேசன்தெரிவித்தார்

போட்டியில் கரிஸ்நாத் (இரண்டாம் இடத்தை பெற்று பாடசாலைக்கும் வலயத்திற்கும் மாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

சாதனை மாணவன் கரிஸ்நாத் அவரைப் பயிற்றுவித்து வெற்றிக்கு வழிப்படுத்திய ஆசிரியை செல்வி விக்னேஸ்வரன் மீனா ,பக்கவாத்திய கலைஞர் மாணவன் சிவராசா சதுர்சன் (தரம்11) ,பாடகி மாணவி செல்வி சிவகுமார் கோபிதா (தரம்11) ,ஆகியோருக்கும் சகல வழிகளிலும் ஒத்துழைப்புக்களை வழங்கிய ஏனைய ஆசிரியர்களுக்கும், ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கிய ஆசிரியர் ஆலோசகர் திருமதி வசந்தி நிர்மலன் மற்றும் உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு கருணாகரன்  உட்பட வலயக்கல்விப் பணிப்பபாளர் EPSI இணைப்பாளர் மற்றும் ஏனைய பிரதிக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் மாகாணக்கல்விப் பணிப் பாளர் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்ககள் பழைய மாணவர்கள் அதிபர் நன்றியினைத்தெரிவித்துள்ளார்





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours