மொத்த வாக்காளர் எண்ணிக்கை 449,686

அளிக்கப்பட்ட வாக்குகள் 302,382 (67.24%)

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 15,329 (5.1%)

செல்லுபடியான மொத்த வாக்குகள் 287,053 (94.9%)

ஆசனம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்கான குறைந்த பட்ச தகுதியான அளிக்கப்பட்ட வாக்குகளில் 5℅ வாக்குகளைப் பெற்றிருத்தல் கட்டாயமானது

அதாவது (14,353 வாக்குகள்)

மட்டக்களப்பில் 22 அரசியல் கட்சிகளும் 27 சுயேச்சை குழுக்களும் போட்டிக் களத்தில் இருந்தாலும் அவற்றில் நான் எனது முந்தைய பதிவில் குறிப்பிட்டது போன்று 06 அரசியல் காட்சிகள் மாத்திரமே 5% தகுதியை பெற்று ஆசனத்தை பெற தகுதி பெற்றிருந்தன.....

அவையாவன;

1. வீடு - 96,975 (33.8%)

2. திசை காட்டி - 55,498 (19.3%)

3. மரம் - 40,139 (13.98%)

4. படகு - 31,286 (10.9%)

5. தொலைபேசி - 22,570 (7.86%)

6. சங்கு - 14,540 (5.07%)

( இதில் சங்கு வெறும் 197 வாக்குகளால் இவ் 5% தகுதியை பெற்றுக் கொண்டது)....

ஆசன ஒதுக்கீட்டு விவரம்:

01. முதலாவதாக அதிகூடிய வாக்குகளைப் பெற்ற வீட்டிற்கு  போனஸ் (Bonus) ஆசனம் கிடைக்கப்பெற்றது...,....(1)

மாவட்டத்தின் மற்றய 4 ஆசனத்தை தீர்மானிக்கின்ற வாக்குகளாக 261,008 வாக்குகள்  அமைந்திருந்தன...

அதாவது 5% தகுதியை பெறாத அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் பெற்ற 41,374  வாக்குகள் மற்றும் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் என்பன கருத்தில் கொள்ளப்படவில்லை...

(287,053 - 41,374 = 261,008)

261,008/4 = 65,252

அதாவது 65,252 வரையான வாக்குகள் ஒரு ஆசனத்தைப் பெற்றுக் கொடுத்திருந்தது.....

அதன்படி :

02. ITAK கட்சியானது ( தான் பெற்றுக் கொண்ட 96,975 வாக்குகளில் 65,252) வாக்குகளின் மூலம் எனது இரண்டாவது ஆசனத்தையும் பெற்றுக் கொண்டிருந்தது.... (1 bonus +1 )

அத்துடன் வீட்டிற்கு மீதமாக 31,723 வாக்குகள் இருக்கின்றது...

 ( 96,975 - 65,252 =31,723 )

03. திசைகாட்டி பெற்றுக்கொண்ட 55,498 வாக்குகளின் மூலம் அடுத்த சுற்றில் ஒரு ஆசனத்தை தனதாக்கிக் கொண்டது...(1)

04. முஸ்லிம் காங்கிரஸ் ஆனது  40,139 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதன் மூலம்  ஒரு ஆசனத்தை பெற்றுக் கொண்டது... (1)

05. அத்துடன் வீட்டின் மீதமுள்ள 31,723  வாக்குகளின் மூலம் மேலும் ஒரு ஆசனம் கிடைக்கப் பெற்றிருக்கின்றது...,

      (1 bonus +1 + 1 = 03)

இதில் படகு பெற்றுக்கொண்ட 31,286 வாக்குகளை விட வீடானது  only 437 மேலதிக வாக்குகளால் இந்த மூன்றாவது ஆசனத்தை பெற்றுக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது....

வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளின் படியே இது தீர்மானிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடப்பட்டது

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours