( வி.ரி.சகாதேவராஜா)

144 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா தை அமாவாசை (29/01/2025)  இன்று புதன்கிழமை இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

நிகழ்விற்காக இலங்கையில் இருந்து சித்தர்கள் குரல் அமைப்பின் ஸ்தாபக தலைவர்  சிவசங்கர் ஜி ஜி தலைமையில் ஒரு குழுவினர் இந்தியா சென்றுள்ளனர்.

இன்று 29ம் திகதி பூரண அமாவாசை தினத்தில் அங்கு மாபெரும் பல்லாயிரம் யோகிகள், ஆன்மீக குருமார்கள் சூழ 10,000 தேவ ரிஷிகள், சிவசாதுக்கள், அகோரிகள், நாக சாதுக்களுக்கு அன்னதானம் செய்வார்கள் . சிவசங்கர் ஜீ அங்கு 
அபூர்வ சஞ்சீவினி மூலிகைகளை கொண்டு ருத்ர ஹோமம் செய்யவுள்ளார்.
அங்கு இவ்விதம் பிரார்த்தனை செய்தால் 108 நாட்களுக்குள் நடந்தே ஆகும் .

*"சிவோகம்" என்ற மகா மந்திரத்தை இந்த வாரம் அடிக்கடி சொல்லி வாருங்கள்.... பல அற்புதங்கள் நிகழ காத்திருக்கிறது. என்றார் அவர்.

வரலாறு:

2025 பிரயாக்ராஜ் மகா கும்பமேளா அல்லது 2025 மகா கும்பமேளா (2025 Prayag Kumbh Mela), இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் கிழக்கில் உள்ள பிரயாக்ராஜ் (அலகாபாத்) எனுமிடத்தில் கங்கை ஆறு, யமுனை ஆறு மற்றும் சரசுவதி ஆறுகள் ஒன்றுகூடும் திரிவேணி சங்கமத்தில் 13 சனவரி 2025 முதல் 26 பிப்ரவரி 2025 வரை தொடர்ந்து 44 நாட்கள் நடைபெறும் சிறப்பு கும்பமேளா ஆகும். 

 கும்பமேளாவின் போது திருவேணி சங்கமத்தில் இந்து சமய பக்தர்கள் புனித நீராடுவதே நோக்கமாகும்
.
இந்தியா மற்றும் உலகின் பல பகுதிகள் முழுவதிலிருந்து 45 கோடி பக்தர்கள் மகா கும்பமேளாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிற்து.

தற்போது 2025ல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மகா கும்பமேளாவானது 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவதாகும்.

 இதற்கு முன்னர் மகா கும்பமேளா 1881ஆம் ஆண்டில் நடைபெற்றது.

 யுனெஸ்கோ நிறுவனம் கும்பமேளாவை புலப்படாத பண்பாட்டுப் பாரம்பரியமாக அறிவித்துளளது.


சாதாரணமாக கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரயாக்ராஜ், அரித்துவார், உஜ்ஜைன், நாசிக் நகரங்களில் பாயும் புனித ஆறுகளில் கொண்டாடப்படுகிறது.

ஜோதிடப்படி குரு, சூரியன், சந்திரன் ஆகிய கிரகங்கள் ஒரு நேர்கோட்டில் வரும் காலங்களில் கும்பமேளா நடைபெறுகிறது.

ஆனால் இன்று நடைபெறும் மகா கும்பமேளா 145 வருடங்களுக்கு ஒரு தடவை வருவதால் அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சரித்திர நிகழ்வாகும்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours