எஸ்டா அமைப்பின் கல்விப் பணி (25/01/2025) எஸ்டா அமைப்பின் ஸ்தாபக தலைவரும் சமூகசேவகருமான அ வசீகரன் (J.P) அவர்களின் தலைமையில் மட் /பட் /எருவில் கண்ணகி மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.இந்த நிகழ்வில் எருவில் கிராமத்தை சேர்ந்த 300 மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் கற்றல் செயற்பாட்டிற்கு வழங்கி வைக்கப்பட்டது.வெளிநாட்டில் வசிக்கும் உறவுகள் மற்றும் உள்ளூர் உறவுகளின் நான்கு லட்சம் ரூபாய் நிதி பங்களிப்பில் இப்பணி முன்னெடுக்கப்பட்டது."கல்வியே நிலையான ஒரு அபிவிருத்தி சமுதாயத்தை உருவாக்கும் வலிமை மிக்க ஆயுதம்" அந்தவையில் இப்பணிக்கு உதவிய உறவுகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.அத்துடன் எஸ்டா அமைப்பின் கல்விப் பணி சிறப்புற வித்தியாலய மண்டபத்தினை பயன்படுத்த அனுமதி தந்துதவிய வித்தியாலய அதிபர் அவர்களுக்கும் எஸ்டா குழுமத்தின் ஆலோசகர்கள், உறுப்பினர்கள்,சகல வகையிலும் உதவி வழங்கிய கிராம உறவுகள்,கலந்துகொண்டு நிகழ்வு சிறப்படைய உதவிய அதிதிகள் அனைவருக்கும் தெரிவிக்கின்றார் அதிபர் இ ஜீவராஜ் நன்றிதெரிவித்துள்ளார்
Post A Comment:
0 comments so far,add yours