பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் 23.01.2025. எனக்கு முன்னதாக உரையாற்றிய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் மட்டக்களப்பில் டெக்ஸ்டைல் துறை குறித்து கூறியிருந்தார். அந்தவகையில் உண்மையில் ஜே ஜே மில்ஸ் மற்றும் அவ்விடத்தில் தொலைதொடர்பு வலயம் அல்லது ஏற்றுமதி வலயமொன்றை ஏற்படுத்துவது தொடர்பில், விமல் வீரவன்ச இன்டஸ்ரீஸ் நடவடிக்கை மேற்கொண்டிருந்தது. இது கடந்த 2017 – 2019 காலப்பகுதிகளில் என்று நான் நினைக்கின்றேன். அது அவ்வாறு ஒரு நீண்ட காலமாக இழுபறி நிலையிலிருந்த திட்டமொன்று. மட்டக்களப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின்போது இந்த முன்மொழிவிற்கு மாவட்ட உறுப்பினர் என்ற வகையிலும் மக்கள் என்ற ரீதியிலும் மிகுந்த எதிர்ப்பை தெரிவித்த விடயமாகும். ஏனெனில், இது புண்ணக்குடா எனும் கடற்கரை பகுதியிலேயே அமைக்கப்பட்;;;டுள்ளது. பாசிகுடாவை அடுத்து உள்ள சிறந்த கடற்கரை புண்ணக்குடா. கடற்கரை பகுதியில் இந்த தொழிற்துறை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. உண்மையில் இது சுற்றுலாத்துறை ரீதியில் அபிவிருத்தி செய்யப்படக் கூடிய பிரதேசமொன்று. எனினும் இது இந்த அரசாங்கத்தின் வேலை இல்லை. இது கடந்த அரசாங்க காலப்பகுதியில் இருந்து முன்னெடுக்கப்பட்டு வந்த திட்டமொன்று. அதில் சில திருத்தங்கள் மாத்திரமே தற்போது முன்வைக்கப்பட்டு வருகிறது.
மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் நான் கேட்டுக் கொள்ளும் விடயம், இதில்
கழிவு முகாமைத்துவம் மேற்கொள்ளப்பட்டே நீர் கடலுக்கு விடப்படுவதாக
கூறப்படுகிறது. அது உண்மையாக மேற்கொள்ளப்படுகிறதா என்பதையாவது உறுதி செய்ய
வேண்டும். இதற்கு நீர் வழங்கலை பெற தேசிய நீர் வழங்கல் சபையின் ஊடாக நீரை
பெற்றுக் கொள்வதாயின் அப்பகுதியில் ஏற்கனவே உள்ள நீர் வழங்கல் போதியளவில்
இல்லை. மக்களுக்கு நீரை பெற்றுக் கொடுப்பதற்கே போதாது உள்ளது. ஏனெனில் உள்ள
நீரின் அளவு குறைவாக உள்ளது. எனவே அது குறித்தும் ஆராய்ந்து பார்க்க
வேண்டும்.
அரிசி
இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நான் இந்த அரசாங்கத்திடம் ஒரு
வேண்டுகோளை முன்வைக்க விரும்புகிறேன். உண்மையில் தேவையான அளவு அரிசி
மற்றும் இந்த வருடத்திற்குள் அறுவடை செய்யப்படும் நெல்லின் அளவு, இந்த
வெள்ளப்பெருக்கு காலப்பகுதியின் பின்னர் மட்டக்களப்பை எடுத்துக் கொண்டால்
இந்த ஒரு மாதத்திற்குள் மாத்திரம் மட்டக்களப்பில் மூன்று முறை
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதற்கு பல காரணங்கள் உள்ளது. அது தொடர்பில்
நான் விவாதத்தை திசைதிருப்ப போவதில்லை. வழங்கப்பட்ட தகவல்களுக்கு அமையவே
அரிசி இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால் அந்த தகவல்கள் பிழையானது என இந்த
அரிசி இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி அவர்களே தனது உரையொன்றில்
கூறியிருந்தார். ஏப்ரல் மாதம் சிங்கள தமிழ் புத்தாண்டின் போது மேலும் அரிசி
தட்டுப்பாடு நிலவக்கூடும். மட்டக்களப்பில் உள்ள ஃபுட் சிட்டியிலும்
சிவப்பு அரிசி கொள்வனவு செய்வதற்கு இல்லை. இதனை கேலிக்கையாக எடுத்துக்
கொண்டு இல்லை இல்லை அரிசி உள்ளது என கூற வேண்டாம். இது தொடர்பில் ஆராய்ந்து
பார்க்க வேண்டும். எதிர்காலத்தில் இது பாரிய பிரச்சினையாக அமையும்.
மட்டக்களப்பு மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் அறுவடை செய்யும்
காலப்பகுதியில் வயல் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. இதனால் பாரிய
நெருக்கடி ஏற்படக்கூடும். ஒரு பக்கம் அரிசி தட்டுப்பாடு. அடுத்தது
நெல்லுக்கு உரிய விலை வழங்கப்படுவதில்லை. அப்படி இல்லை எனில் விவசாயிக்கான
இழப்பு. இதனை முகாமைத்துவம் செய்வதற்கு அரசாங்கம் இதைவிட காலத்தை
செலவிடுவது சிறந்ததாக அமையும்.
கடந்த
காலங்களாக அரசாங்கத்தின் குறைபாடுகள் எமக்கு தெரிகிறது. ஒரு கட்சி என்ற
ரீதியிலோ பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியிலோ இது தொடர்பில் நாம் அதிக
விமர்சனங்களை முன்வைக்கவில்லை. இந்த அரசாங்கம் புதிது. இந்த
அரசாங்கத்திற்கு குறிப்பிட்ட காலத்தை வழங்க வேண்டும் என்பதை நாம் அறிவோம்.
ஆனால் சில விடயங்கள் தொடர்பில் நாம் அமைதியாக இருக்க முடியாது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த அரசாங்க காலப்பகுதியில் பாரியளவிலான
வனப்பகுதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டது. யானை வேலி அமைக்கப்பட்ட
வனப்பகுதிகளின் உள்ளே சட்டவிரோதமாக சிலர் தனிப்பட்ட ரீதியில் யானை வேலிகளை
அமைத்து கொண்டு விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதுமட்டுமின்றி கடந்த போகத்தில் விவசாய நடவடிக்கை மேற்கொண்ட இடங்களை
வேறொருவருக்கு விற்பனை செய்து தற்போது வேறு வனப் பகுதிகளில் விவசாய
நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். சாதாரண மக்கள் வனப்பகுதிக்குள்
சிறிய கத்தியொன்றை எடுத்துச் சென்றாலும் வனத்துறை அதிகாரிகள் அவர்களுக்கு
எதிராக வழக்கு தொடர்ந்திருப்பர். மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலாளர்
பிரிவில் கெவிலியாமடு எனும் கிராமத்தில் எத்தனை ஏக்கர்கள் என்றும்
தெரியாது. இது கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்றது என பார்த்தால், இது
தற்போது இந்த அரசாங்கத்திலும் இன்னும் அதிகமாக இடம்பெற்று வருகிறது.
இது
தொடர்பில் நான் நேரில் சென்று பார்வையிட்டேன். மாவட்ட அபிவிருத்தி குழு
தலைவர், மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு ஆகியோருக்கு
இது தொடர்பில் அறிவித்தேன். நீங்கள் ஏன் அதை பார்வையிட சென்றீர்கள் என
தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஏற்பாட்டாளர் அலெக்ஸ் என்பவர் பிரதேச
செயலாளரை அச்சுறுத்துகிறார். நீங்கள் ஏன் பாராளுமன்ற உறுப்பினர்
இராசமாணிக்கம் உடன் ஏன் அதை பார்வையிட சென்றீர்கள் என வனத்துறையின் மாவட்ட
வனத்துறை அதிகாரி பிரதேச வனத்துறை அதிகாரியை அச்சுறுத்துகிறார். நான்
மாவட்ட மக்கள் பிரதிநிதி. இலங்கையின் 22 தேர்தல் மாவட்டங்களில் 21
மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றிருப்பினும் மட்டக்களப்பில்
எமது கட்சியே வெற்றி பெற்றது. நானே வெற்றி பெற்றேன். மக்களின் வாக்குகளின்
ஊடாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினருடன் இணைந்து பணியாற்றுவது
பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளின் கடமை. இது குறித்து ஆராய்வதை
விடுத்து இந்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களை உடனடியாக கைது செய்ய
வேண்டும்.
பேருந்துகளில்
பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற அலங்காரங்களை அகற்றுவது என்பது சிறந்த விடயம்.
இதே போன்றதொரு வேலைத்திட்டமாகவே சுவர்களில் சித்திரம் வரையும்
வேலைத்திட்டமொன்று கோட்டாபய அரசாங்க காலப்பகுதியிலும்
முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அதை மேற்கொண்டிருந்தவர்களே கோட்டாபய
அரசாங்கத்திற்கு எதிராக வீதிக்கு இறங்கினர். எனவே அந்த நிலைமைக்கு நாமும்
செல்ல கூடாது.
மட்டக்களப்பில்
கர்ப்பிணி தாய்மார்களுக்கு கடந்த அரசாங்க காலப்பகுதியில் 5 ஆயிரம் ரூபாய்
பெறுமதியான சத்துணவு பொதி வழங்கப்பட்டது. அந்த 5 ஆயிரம் ரூபாவில் 2 ஆயிரம்
ரூபாயை அபகரித்த பிரதேச செயலாளர் ஒருவர் குறித்து கடந்த அரசாங்கத்தின் போது
குறிப்பிட்டு இருந்தேன். ஆனால் கடந்த அரசாங்கம் அது குறித்து நடவடிக்கை
எடுக்கவில்லை. இந்த அரசாங்கத்தில் இடமாற்றம் வழங்கப்பட்டு அவருக்கே சிறந்த
இடம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த மாவட்டத்திலுள்ள யாரையாவது கையில்
போட்டுக் கொள்கின்றனர். தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டாளரையோ தெரியவில்லை
அவர் கையில் போட்டுக் கொண்டிருப்பது. ஏனென்றால், இங்கு இரண்டு
மணிநேரத்திற்கும் மின்குமிழ்களை பொருத்தாவிட்டால் தெரியும் என அவர் பிரதேச
சபையின் செயலாளர்களையே அவர் மிரட்டுகிறார். நாம் இதை எதிர்பார்க்கவில்லை.
நாம்
கடந்த காலங்களில் பிள்ளையான்களுடன் அரசியல் செய்து அவர்களையே தோற்கடித்து
விட்டே வந்துள்ளோம். நான் அறிந்த வகையில் இவர் மட்டக்களப்பு மாவட்டத்தை
சேர்ந்தவர் அல்ல. அவ்வாறு இருக்கையில் இங்கு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள
அதிகாரிகளை மிரட்டுவதை அல்ல நாம் எதிர்பார்த்தது. அரசியல் செய்வதற்கு சகல
கட்சிகளுக்கும் அதிகாரம் உள்ளது. மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் பணியாற்ற
அனைத்து அதிகாரிகளுக்கும் அதிகாரம் உள்ளது.
மட்டக்களப்பில்
சட்டவிரோத மணல் அகழ்வை தடுப்பதாக மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர்
தீர்மானமொன்றை நிறைவேற்றுகிறார். ஆனால் இன்று காலை மணல் ஏற்றிக்
கொண்டிருக்கின்றனர். இவ்வாறு மாவட்ட ரீதியான பிரச்சினைகள் காணப்படுகின்றன.
பயங்கரவாத தடை சட்டம் குறித்து பிரச்சினைகள் உள்ளன. பயங்கரவாத தடை சட்டத்தை
நீக்கக் கோரி நடத்தப்பட்ட கையெழுத்து வேட்டைக்கு தேசிய மக்கள் சக்தி
பிரதிநிதிகள் சகல மாவட்டங்களுக்கும் என்னுடன் வருகை தந்தனர். அதன்போது
பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கி புதிய சட்டமூலத்தை கொண்டுவர அதன்போது
கோரவில்லை. அதனை நீக்க வேண்டும் என்றே கோரப்பட்டது. ஆனால் தற்போது
அரசாங்கத்தின் கொள்கை பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கி புதிய சட்டமூலத்தை
கொண்டுவருவதே ஆகும். நாட்டில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை என
அரசாங்கத்தின் நீதித்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஜேவிபி-இனரை
உள்ளடக்கிய தேசிய மக்கள் சக்தி கட்சியினர் அரசியல் கைதிகள் குறித்து இதைவிட
அதிகமாக அறிந்திருக்க வேண்டும். அதேபோன்று மக்களுக்கு நம்பிக்கை
ஏற்படுத்தும் வகையில் மதுபானசாலை அனுமதிபத்திரம் தொடர்பிலும் தகவல்களை
வெளியிடுமாறு கோரிக்கை விடுக்கிறேன்.
Post A Comment:
0 comments so far,add yours