( வி.ரி.சகாதேவராஜா)

கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் 
 125ஆவது ஆண்டு நிறைவினை  சிறப்பிக்குமுகமாக  பெருவிழா சாரணர் பவனி நேற்று முன்தினம் கல்முனை நகரில் கோலாகலமாக நடைபெற்றது.

அதேவேளை, அங்கு நடைபெற்று வந்த மூன்று நாள் சாரணர் பயிற்சி முகாமின் இறுதி நாள் நிகழ்வுக்கு அணி சேர்த்தால் போல் இப் பவனி சிறப்பாக இடம்பெற்றது.

மேலும், கிளீன் சிறிலங்கா நிகழ்ச்சி திட்டத்திற்கு அமைவாகவும் இது முன்னெடுக்கப்பட்டது.

 குறித்த நிகழ்வானது பாடசாலையின் அதிபர் அருட்.சகோ. எஸ்.இ.றெஜினோல்ட் FSC தலைமையில்  Jubilee Scout Rallyயுடன் ஆரம்பிக்கப்பட்டது.

 நிகழ்வின் இறுதியில் சாரணர் பயிற்சி முகாமில் கலந்து சிறப்பித்த பாடசாலை மாணவர்களுக்கு சான்றிதழ்களும் நினைவுச்சின்னங்களும்  வழங்கப்பட்டது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours