(பாறுக் ஷிஹான்)
 
கல்முனை தலைமையக  பொலிஸ் நிலையத்தின் 2024 ஆண்டிற்கான வருடாந்த அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை நிகழ்வு கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ரம்சீன் பக்கீர்  தலைமையில் இன்று (22) கல்முனை உவெஸ்லி பாடசாலை  மைதானத்தில்  நடைபெற்றது.

 இந்நிகழ்விற்கு  அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.ஜி.டி.எஸ். அமரசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்ச௧ர்   இப்னு அசார் நெறிப்படுத்தலில்   அணிவகுப்பில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு ஏற்றுக் கொண்டார்.

 மேலும் பொலிசாரால் பொது மக்களுக்கு வழங்கப்படும் பொலிஸ் சேவை பிரிவு நிலையங்கள்,  சுற்று சூழல்,  பொலிஸ் உத்தியோகத்தர்களின் தங்குமிட அறைகளை பார்வையிட்டதுடன்  பொலிஸார் பயன்படுத்தும் வாகனங்களையும் பரிசோதனை மேற்கொண்டார்.

இந்நிகழ்வில்   பொலிஸ் உப பரிசோதகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினர் என கலந்து கொண்டனர்.





 

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours