மகாலிங்கம் ஹேஷ்மிகா



சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட கணேஷாவித்தியாலயத்தில் கற்பித்த முருகுப்பிள்ளை மஹாலிங்கம் ஆசிரியர்; தனது 33 வருட கல்விச்சேவையில் இருந்து அண்மையில் ஓய்வுபெற்றார்.

இவரது சேவையினைப் பாராட்டி  கௌரவிக்கும் நிகழ்வு கணேஷாவித்தியாலய அதிபர் திருமதி கார்த்தியாயினி துரைலிங்கம் தலைமையில் வெள்ளிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றிருந்தது.

முருகுப்பிள்ளை அருளம்மா தம்பதியினரின் புதல்வரான இவர் துறைநீலாவணையினைப் பூர்வீகமாகக்கொண்டதுடன் மத்தியமுகாம் 11 ஆம் கிராமத்தினை பிறப்பிடமாகவும் கோட்டைக் கல்லாற்றினை வசிப்பிடமாகவும் கொண்டவர். 1992 .06. 01 அன்று ஆசிரியராக சது /றாணமடு இந்துக்கல்லூரியில் முதல் நியமனம் பெற்று விவேகானந்தாமகாவித்தியாலயம் நாவிதன்வெளிஅன்னமலைமகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கடமையாற்றியதுடன் பின்னர் 2009.01.26 இலங்கை தேசிய கல்வி நிறுவகத்தின் அம்பாரை ஆசிரிய மத்தியவள நிலையத்தின் சிங்கள ஆசிரியர்களுக்கு தமிழ்மொழிமூல வளவாளராகக் கடமையாற்றினார். பட்டதாரியான  இவர் பட்டப்பின் கல்வி டிப்ளோமா பேராதனை கல்வியியல் கல்லூரியில் (சீ.சீ.பி.எஸ்.டி) ஆங்கிலச் சான்றிதழயும் பெற்ற இவர் 2015/2016 ஆண்டில் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின்  தேசியமொழிகள் மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நிரந்தர நியமனம் பெற்று அரச உத்தியோகத்தர்களுக்கு மொழிக்கல்விப் பயிற்சி பரீட்சகராகக் கடமையாற்றினார். அதேவேளை பாடசாலையில் சுகாதார செயற்பாடுகளை மேற்கொண்டு முதலாம் இடத்தினைப்பெற்று ஜனாதிபதி விருதினைப்பெற்றுக்கொண்டார். 

இவர் ஆரம்பக்கல்வியினை றாணமடு இந்துக்கல்லூரியிலும் இடைநிலைக்கல்வி மற்றும் உயர்கல்வியினை மண்டூர் மகாவித்தியாலயம் மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியிலும் கற்;றார்  இருதய தொழில்நுட்பவியலாளர்  ம.கிருஷ்ணவேணி அவர்களது கணவரும் ஹேஷ்மிகாவின் தந்தையும் ஆவார்.  இவரது சேவைக்காலத்தில் பிரதிஅதிபராகவும் உதவி அதிபராகவும் பகுதித்தலைவராகவும் கடமையாற்றி தனது அறுபதாவது வயதில் ஓய்வுபெற்றுள்ளார்.





















Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours