நூருல் ஹுதா உமர்
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 77வது சுதந்திர தின நிகழ்வு இன்று ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவு சங்க வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சங்கத்தின் தலைவர் மெளலவி எம்.எம்.எஸ்.ஹாறூன் ஸஹ்வியின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு வாழைச்சேனை கடதாசி ஆலை விஷேட அதிரடிப் படை பிரிவின் உப அதிகாரி மற்றும் கூட்டுறவு சங்கத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோத்தர் ஏ.எம்.எம் பாறூக், சங்க உத்தியோகத்தர்கள், முன்பள்ளி சிறார்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பிரதம அதிதியினால் தேசியக் கொடி ஏற்றி வைக்க பட்டதைத் தொடர்ந்து மௌலவி எம்.எம்.எஸ்.ஹாறூன் அவர்களால் உரை நிகழ்த்தப்பட்டது. நாம் இனத்தால் மனிதர்கள், மொழியால் தமிழர்கள் தேசத்தால் இலங்கையர்களே இந்த உணர்வு எப்பொழுதும் எங்களது உள்ளங்களில் ஆழமாக பதிந்திருக்க வேண்டும்.
எமது இலங்கை நாடானது இயற்கை அழகும் எழில் கொஞ்சும் தோற்றமும் கொண்ட சிறந்த நாடு. வேறு நாடுகளுக்கு சென்று பார்க்கும் போதுதான் நமது நாட்டின் அருமையை உணர முடியும் என குறிப்பிட்டார்.
மேலும் உரை நிகழ்த்திய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்கள் தான் இந்நிகழ்வில் கலந்து கொள்வதையிட்டு மகிழ்ச்சிடைகின்றேன். நாம் எல்லோரும் இலங்கையர் என்ற ஒற்றுமை கட்டியெழுப்பப்பட வேண்டும். இன மத பேதம் கடந்து ஒற்றுமையாக பயணிப்பதற்கு எல்லோரும் இலங்கையர் என்ற எண்ணமே காரணமாக அமையும் என குறிப்பிட்டார்.
மேலும் கூட்டுறவு சங்க உத்தியோத்தர்களினால் பாதைசாரிகளுக்கு குடிபானம் வழங்கப்பட்டது
Post A Comment:
0 comments so far,add yours