( வி.ரி.சகாதேவராஜா)
மாசி மாத பெளர்ணமி தினத்தை முன்னிட்டு மண்டூர் பாலமுனை ஶ்ரீ ஆத்ம ஞான பீடத்தில் மகா யாகம் சிறப்பாக நடைபெற்றது.
ஆன்மீக
ஜெகத்குரு மகாயோகி கேஎஸ்.புண்ணியரெத்தினம் சுவாமிகளினால் முறையே
திருவிளக்கு பூஜை, காயத்திரி சித்தர் பகவான் ஆர்.கோ. முருகேசு சுவாமிகளின்
தெய்வீக திருப்பாதங்களுக்கு குரு பாதாபிஷேகம், இவ்வுலகினை ஆளும்
ஷப்தரிஷிகள் 18 சித்தர்களை ஆவாகனம் செய்து 18 பூரண கலசங்கள் வைக்கப்பட்டு
இந்தியாவிருந்து தருவிக்கப்பட்ட மிக சக்திவாய்ந்த காயகல்ப சஞ்ஜீவினி உயிர்
ஜீவ மூலிகைகள் இடப்பட்டு சக்திவாய்ந்த மகா மந்திரங்கள் பாராயணம்
செய்யப்பட்டு மாசி மாத பௌர்ணமி உலக சேமத்திற்கான காயத்திரி மகாயாகம்
மிகவும் பக்திப்பூர்வமாக நிழ்த்தப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours