(சுமன்)


எதிர்காலத்தில் மாகாணசபை, பிரதேச சபைகளின் அதிகாரங்களை எம்மவர்களிடமிருந்து எடுத்து தாங்கள் திணிக்கின்ற அதிகாரங்களையும், அபிவிருத்திகளையும் தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளும் வகையிலான நீண்ட கால செயற்திட்டத்தை இந்த அரசு மேற்கொண்டு வருகின்றது என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைமை குறித்து கருத்துத் தெரிவிக்;கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த ஆட்சி மாற்றத்தில் நாங்கள் மிகப் பெரியதொரு அழிவை சந்திக்க நேரிடும். ஏனெனில் தற்போதைய அரசாங்கம் சத்தமின்றி சலசலப்பின்றி சிரித்த முகத்துடன் தமிழர் தாயகத்தில் தனி சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றது. தேர்தல் காலங்களில் இந்த அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பொய்யான வாக்குறுதிகளை எமது தமிழ் மக்கள் நம்பி அதன் பிரதிநிதிகளுக்கு பெருவாரியான வாக்குகளை அளித்து தமிழ்த் தேசியத்தைப் புறந்தள்ளி இன்று எமது இருப்பையே கேள்விக்குறியாக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தமிழர்கள் நாங்கள் இன்று எமது தேசிய அரசியற் கட்டமைப்பை இழந்து நிற்கின்றோம். ஒரு தனித்துவமான இனம் என்ற ரீதியில் தமிழ்த் தேசிய அரசியற் பரப்பு அதியுச்ச பலம் பெற்றிருந்த காலத்தில் நாங்கள் மிகவும் பலமாக இருந்தோம். எமது ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் எமது தேசிய அரசியற் பரப்பும் சிதைக்கப்பட்டு இன்று எமது தேர்தல் அரசியலும் ஒரு பலவீனமான நிலைக்கு நகர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் எமது பலவீனங்களை தெளிவாக அறிந்து ஆட்சிக்கு வந்திருக்கும் அரசாங்கம் எமது இனத்துக்குள்ளேயே பிரிவினைகளை ஏற்படுத்தி தனது ஆக்கிரமிப்பு அதிகரங்களை எம்முள் திணித்து வருகின்றது.

அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் வழங்;கப்படும் நல்லாட்சி என்ற மாய விம்பம் ஒன்றைத் தோற்றுவித்து எமது மக்களை ஏமாற்றி தென்னிலங்;கை அரசியற் கட்சி என்றுமில்லாதவாறு எமது தாயகத்தில் ஒரு வெற்றியைப் பெற்றுள்ளது. இதன் மூலம் எமது நிலங்கள் ஆக்கிரமிப்புச் செய்யப்படுவதும், தேசிய இருப்பை இல்லாமல் செய்வதற்குமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதும் எங்களால் புரிந்து கொள்ள முடிகின்றது.

தற்போது தமிழர் தரப்பை மையமாக வைத்தே பல நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த கால அரசாங்கங்களைப் போலவே இந்த நாட்டை முழுமையாக சிங்கள பௌத்த நாடாக மாற்றும் முழுமையான திட்டத்தை மேற்கொண்டு வருகின்றது. இதற்காக எதிர்வருகின்ற தேர்தல்களையும் சரியான முறையிலே கையாள்வதற்கும் திட்டமிடப்பட்டிருக்கின்றன. எதிர்காலத்தில் மாகாணசபை, பிரதேச சபைகளின் அதிகாரங்களை எம்மவர்களிடமிருந்து எடுத்து தாங்கள் திணிக்கின்ற அதிகாரங்களையும், அபிவிருத்திகளையும் தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளும் வகையிலான நீண்ட கால செயற்திட்டத்தை இந்த அரசு மேற்கொண்டு வருகின்றது.

இந்த அடிப்படையிலேயே சீனாவின் அபிவிருத்திச் செயற்திட்டங்கள் வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த காலங்களில் பல எதிர்ப்புகளின் மத்தியில் அவை நிறுத்தப்பட்டன. ஆனால் இன்று மிக நிதானமாக அவை செயற்படுத்தப்பட்டு வருகின்றது. இது மிகவும் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். சீனா தமிழ் மக்கள் மீது கொண்ட விருப்பத்தினால் எமது பகுதி முன்னேற வேண்டும் என்ற எண்ணத்துடன் வரவில்லை. அது அவர்களின் பூகோள இராஜதந்திரம். இதனை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும்.  

வடக்கு கிழக்கு தாயகத்தின் உள்ளுராட்சி அதிகாரங்கள், மாகாணசபை அதிகாரங்கள் தமிழர் தரப்பில் இருந்து பிடுங்கப்பட்டு தென்னிலங்கை சக்திகளின் கையில் இருந்தாலேயே சீனாவின் திட்டங்களுக்கு அவை ஒத்துழைப்பாக இருக்கும். இதனை தமிழ் மக்களே புரிந்து கொள்ள வேண்டும். இந்த நிலையிலேயே தமிழ் மக்கள் இருப்பார்களாக இருந்தால் எமது விடுதலைப் போராட்டத்தினூடாக உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசிய அரசியல் முற்றுமுழுதாக வேரோடு இல்லாமலாக்கப்பட்டு எமது இனம் இந்த நாட்டிலே அடிமைகளாக வாழக்கூடிய நிலைமையே ஏற்படும்.

தேர்தல் அரசியலென்பது எமது இனத்தின் இருப்பைத் தீர்மானிக்கும் சக்தியாக இரந்துவிட முடியாது. எமக்கு இருந்த கட்டமைப்புகளோடு பார்க்கும் போது அக்காலத்தில் எமக்கு தேர்தல் அரசியல் மிகவும் இலகுவாகவே இருந்தது. யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தேர்தல் அரசியல் கட்டமைப்பை எங்களால் சரியாகக் கையாள முடியவில்லை. இந்த நிலையில் தேர்தல் அரசியலை இலக்காகக் கொண்டு எமது தேசிய அரசியலை வென்றுவிடலாம் என்று நினைப்பது தவறானது. எனவே தற்போதைய நிலையில் தமிழ் மக்களின் பலம என்;பது சர்வதேச ரீதியிலான அரசியலை முன்னெடுப்பதிலேயே இருக்கின்றது. இந்த சர்வதேச அரசியலில் நாங்கள் அதிகாரமுள்ள உலகநாடுகளுடன் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்தி எங்களது நியாயங்களை முடிந்தவரை தெளிவுபடுத்தியிருக்கின்றோம். இந்;த நிலைமைகளை நாம் சரியாகப் புரிந்துகொள்ளும் போதே எமது இலக்;கை நாம் வென்றெடுக்க முடியும் என்று தெரிவித்தார்.   
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours