எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்ட  பெண்கள் அபிவிருத்திக்கான மாவட்ட  காலாண்டு  மீளாய்வு கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பில் மகளிர் பாதுகாப்பு  மற்றும்  மகளிர்  வன்முறைகள் தடுத்தல்  தொடர்பான வேலைத்திட்டமானது
மாவட்ட மகளிர் அபிவிருத்தி இணைப்பாளர் அருணாளினி சத்திர சேகரம் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றது.


இதன் போதுபெண்களுக்கான வாழ்வாதார வேலைத்திட்டங்கள் , மாவட்டத்தில் வன்முறையினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான  பாதுகாப்பு மற்றும் சுகாதாரம்  போன்ற பல விடயங்கள் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

 காலாண்டு  மீளாய்வு கூட்டத்தில்
மாவட்ட  மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஶ்ரீகாந்த், உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன் மற்றும் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் கடமையாற்றும்  மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ,மகளிர் அபிவிருத்தி வெளிக்கள உதவியாளர்கள்,அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours