நூருல் ஹுதா உமர்

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) யில் ஆசிரியர்களாக கடமையாற்றி இலங்கை அதிபர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழா இன்று ஆசிரியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் கல்லூரி அதிபர் ஏ.பி. பாத்திமா நஸ்மியா சனூஸ் (SLEAS) தலைமையில் சேர் ராசிக் பரீட் மண்டபத்தில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் இலங்கை அதிபர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட மஹ்மூத் மகளிர் கல்லூரியின் மூன்று ஆசிரியர்களான எஸ்.எம். உவைஸ், றிஸ்லியா முகம்மது உவைஸ், ஏ.பீ. றோஷன் டிப்றாஸ் ஆகியோர்கள் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.

ஆசிரியர்களாக இருந்து அதிபர் சேவையில் இணைந்திருக்கும் இவர்கள் எமது கல்லூரியின் கல்வி அபிவிருத்தி, பெளதீக வள முகாமைத்துவம், ஒழுக்கம், சமூக விஞ்ஞான மற்றும் போட்டி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் தங்களை முன் நிலைப்படுத்தி பல்வேறு அதிபர்களுடன் இணைந்து பணியாற்றி கல்லூரி
வளர்ச்சி அடைய செய்வதில் முக்கிய  பாத்திரத்தை வகித்தவர்கள். இவ்வாறானவர்களின் ஆசிரியத்தின் சேவையை பாராட்டி கெளரவிப்பதில் பாடசாலை சமூகம் பெருமிதம் கொள்கிறது என இதன்போது வாழ்த்துரை நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதி அதிபர்களான ஹாஜியானி எஸ்.எஸ்.எம். மசூது லெவ்வை, ஏ.எச். நதீரா, உதவி அதிபர்களான எம்.எஸ். மனூனா, என்.டி. நதீகா, பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.இந்நிகழ்வில் பிரதி மற்றும் உதவி அதிபர்கள், பதவி உயர்வு பெற்ற இந்த ஆசிரியர்கள் பற்றிய நினைவுகள் மற்றும் வரலாற்று நினைவலைகளை சபையினர் மத்தியில் பகிர்ந்து கொண்டனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours