எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான விசேட கலந்துரையாடலானது   சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி மாவட்ட மேற்பார்பை உத்தியோகத்தர்  ரீ. நிலோஷன்  தலைமையில் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (14) இடம் பெற்றது.

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கி வரும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் 2025 ஆம் ஆண்டிற்கான செயற்றிட்டம் தயாரித்தல் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் கடமையாற்றும் சிறுதொழில் முயற்சி  அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு தமது பிரதேச பிரிவுகளுக்கு பொருத்தமான செயற்திட்டங்கள் தொடர்பான திட்டங்களை முன்மொழிந்தனர்.

அரசாங்கத்தின் புதிய  கொள்கைகளுக்கு ஏற்ப முயற்சியாளரினை வலுப்படுத்தும் நோக்கில் இத்திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என இதன் போது கருத்துக்கள் பரிமாறப்பட்டது.


இந் நிகழ்வில் சிறு தொழில் முயற்சியாண்மை பயிற்சி உத்தியோகத்தர் எஸ் வினோத்  கலந்து கொண்டார்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours