( வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மாவட்டத்தின்
திருக்கோவில்
பிரதேசத்தில் இடம்பெறுகின்ற இல்மனைட் அகழ்வு செயற்பாட்டினை உடனடியாக
நிறுத்து நிறுத்த கோரி ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிற்கு தபாலட்டை(
postcards) அனுப்பும் வேலைத்திட்டம் நேற்று திங்கட்கிழமை ஆரம்பித்து
வைக்கப்பட்டது.
திருக்கோவில்
பிரதேச மக்கள் பெண்கள் அமைப்புகள் மீன வர்கள் உட்பட இளைஞர்கள் மாணவர்கள்
அனைவரும் இணைந்து இந்த தபாலட்டை அனுப்பும் வேலைத்திட்டத்தில் பங்கு
பற்றினர்.
"ஜனாதிபதிக்கு ஓர் மடல்" எனும் செயற்திட்டத்தினை சூழலியல் நீதிக்கான மக்கள் கூடல் நிறுவனம் ஆரம்பித்து வைத்தது.




Post A Comment:
0 comments so far,add yours