(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் புனித நோன்பு ஆரம்பமாவதை முன்னிட்டு, புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட இடைக்கால நிர்வாக சபையினர் பள்ளிவாசலை சுத்தப்படுத்தும் பணிகளில் இன்று (01) சனிக்கிழமை மும்முரமாக ஈடுபட்டனர்.
இதன்போது போது இடைக்கால நிர்வாக சபையின் தலைவர் டாக்டர் எம்.எச். சனூஸ் காரியப்பர், பொதுச் செயலாளர் பொறியியலாளர் எம்.எம்.எம்.முனாஸ், பொருளாளர் ஏ.எல்.எம்.முஸ்தபா உட்பட புதிய இடைக்கால நிர்வாக சபையின் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்ட மரைக்காயர்கள் கலந்து கொண்டு பள்ளிவாசலைச் சுத்தப்படுத்தியதுடன் சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பினர் தானாக முன்வந்து இச்சிரமதானப் பணியில் இணைந்து கொண்டு தங்களது பூரண பங்களிப்பையும் வழங்கி இருந்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours