மட்டக்களப்பில் ரயில் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவரது பெறுமதியான பொருட்கள் மட்டக்களப்பில் ஆட்டோக்காரரால் அபகரிப்பு.
14 ம் திகதி புதன்கிழமை மாலை 3.15 இற்கு கொழும்பிலிருந்து மட்டக்களப்பு வந்த ரயிலில் வந்திறங்கிய கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளரும் அவரது குடும்பமும்இ இரவு 11.00 மணிக்கு கல்முனை பஸ்ஸில் ஏறுவதற்காக ரயில் நிலையத்திதிற்குள் நின்ற ஆட்டோவில் ஏறி கல்லடி சந்திக்கு இடையில் உள்ள சந்தியில் இறங்கி அவ்விடத்தில் நின்ற பஸ்ஸில் ஏறியுள்ளனர். அதே நேரம் தங்களது கைப்பை ஒன்றை ஆட்டோவிற்குள் வைத்துவிட்டதால் மீண்டும் பஸ்ஸை விட்டு இறங்கிய இவர்கள் குறிப்பிட்ட ஆட்டோவை ரயில் நிலையத்திற்கு வந்து தேடியுள்ளனர். ஆனால் அங்கு அந்த ஆட்டோ இல்லை.
ஆட்டோவில் விட்ட கைப்பையில் பெறுமதியான போனும் இருந்துள்ளது. போனுக்கு அழைப்பு விடுத்த நேரம் பெல் சென்றுள்ளது. அதே நேரம் குறிப்பிட்ட ஆட்டோக்காரர் போனை ஒப் செய்துள்ளார்.
அந்த ஆட்டோவில் விடப்பட்ட ஆட்டோவிற்குள் பாஸ்போட்இ தேசிய அடையாள அட்டைஇ பணம்இ நகைககள்இஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்இ பெறுமதியான போன்இ போன் சார்ஜர்இ வீட்டுத் திறப்புகள் என்பன இருந்துள்ளது.
இந்தக்களவு சம்மந்தமாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துஇ மட்டக்களப்பு ஆட்டோ சங்க தலைவரையும் பொலிஸ் நிலையத்திற்குள் அழைத்து விசாரித்தும் இதுவரை குறிப்பிட்ட பொருட்கள் கிடைக்கப்பெறவில்லை. ஆனால் ஆட்டோ சங்கத்திற்கு தெரியாமல் குறிப்பிட்ட ஆட்டோக்காரர் 11.00 மணிக்கு ரயில் நிலையத்திற்குள் வந்து பயணிகளை ஏற்ற முடியாது. என தெரிவிக்கின்றனர்
இது சம்பந்தமாக மட்டக்களப்பு பொலிசார் அப்பிரதேச CCT கமராக்களின் பதிவுகளை பெற்று வருகின்றனர்.
இக்கொள்ளை சம்மந்தப்பட்ட ஆட்டோக்காரர் விரைவில் கைது செய்யப்படுவார் என மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர்.
.jpeg)
Post A Comment:
0 comments so far,add yours