சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் வாகரைப்பிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்ட கதிரவெளி அம்மந்தநாவெளி கிராமத்தினைச்சேர்ந்த பல்கலைக்கழக மாணவனின் கல்வி நடவடிக்கைக்காக மாதந்தம் நிதி உதவி வழங்குவதுடன் முதற்கட்டமாக ஒருதொகை பணம் மாணவனின் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டது.

சுவிஸ் உதயம் அமைப்பின் தலைவர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில் நிதி வழங்கிவைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் பொருளாளரும் இலங்கைக்கான இணைப்பாளருமான சமூகசேவகர் தொழிலதிபர் க.துரைநாயகம் அமைப்பின் பதில்செயலாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் பிரதித்தலைவர் கணவரதராஜன் உட்பட சுவிஸ் உதயம் அமைப்பின் அங்கத்தவர்கள் கலந்து சிறப்பித்தனர் 





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours