( வி.ரி.சகாதேவராஜா)
திருக்கோவில் பிரதேச சபையில் ஆட்சியமைக்கும் வண்டில் சின்ன சுயேச்சைக் குழுவும் நாவிதன்வெளியில் இரண்டு ஆசனங்களை பெற்ற வண்டில் சின்ன சுயேச்சை குழுவும் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டன .
இச் சந்திப்பு திருக்கோவிலிலுள்ள சுயேட்சை குழு தலைவர் சுந்தரலிங்கம் சசிகுமாரின் இல்லத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது .
அங்கே
எதிர்கால அரசியல் செயற்பாடுகள் மக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்கள்
தொழில் துறைகள் எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் போட்டியிடுதல் என்பன
தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
கிழக்கு
மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் முதலில் இலங்கை தமிழரசு
கட்சியுடன் பேசுவதற்கு தயார் நிலையில் இருக்கின்றோம் என்பதில் இணக்கம்
காணப்பட்டது.
அவர்களுடனான
சந்திப்பின் பலாபலனைப் பொறுத்து கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் எவ்வாறு
நடந்து கொள்வது என்பது பற்றி விரிவாக கலந்துரையாடப்படும்.
தமிழரசுக்கட்சித்தலைமைப் பீடம் தமது சுயேட்சை அணியோடு
எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்து எதிர்கால திட்டங்கள் அமையும் என்று தலைவர் சு. சசிகுமார் தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours