பாறுக் ஷிஹான்.நூருல் ஹுதா உமர்
 

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் குணநாதன் திங்கட்கிழமை(19)  கல்முனை கல்வி வலயத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்  மேற்கொண்டார் . கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதூல் நஜீம்  தலைமையில் கல்முனை வலய அதிபர்களுடான சந்திப்பு  கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற  நிகழ்விலும் கலந்து கொண்டிருந்தார்.

இதன் போது   கிழக்கு மாகாண கல்விச் செயலாளர் க.குணநாதன் கருத்து தெரிவிக்கையில்
 
மாணவர்களின் கல்வி,நிர்வாகம்,மாணவர்கள் ஒழுக்கம் என்பவற்றிலும், ஆசிரியர்களிடமிருந்து  பாடசாலை உச்சப் பயனை பெறுவதிலும் அதிபர்களின் வகிபாகம் மிக முக்கியமானது என்பதனை குறிப்பிட்டார்.மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சரியான வழிகாட்டல்களை அதிபர்கள் செய்ய வேண்டியது மிக அவசியம் என வலியுறுத்தினார்.

வலயக் கல்வி பணிப்பாளர் மாணவர்களுக்கு கிடைக்கும் பயனை உரிய நேரத்தில் பெற்றுக் கொடுப்பதன் அவசியத்தை குறிப்பிட்டடு அரசு அளிக்கும் நிதி உதவியை மாணவர்களுக்கு அதிபர்கள் பெற்றுக் கொடுப்பதில் பின் நிற்க கூடாது என தெரிவித்தார்.இதன்போது அன்னையில் பலியான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் மாவட்ட மட்டத்தில்  முதலாமிடம் பெற்று மருத்துவ துறைக்கு தெரிவான மாணவியும்  பொறியல் துறையில் முதலாமிடம் பெற்ற மாணவனுக்கும்  கல்விச்செயலாளரல் நினைச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


மேலும் பௌதீக வளம் குறைந்த மூன்று பாடசாலைகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டதுடன்இ இருபது மாணவர்களுக்கு அவர்களின் கல்விச் செலவுக்கான காசோலையும் வழங்கி வைக்கப்பட்டது




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours