( வி.ரி.சகாதேவராஜா)
மட்டக்களப்பு சிவாநந்த வித்தியாலயம் மற்றும் திருகோணமலை கோணேஸ்வரா இந்துகல்லூரி ஆகிய வற்றுக்கிடையிலான 30 வது பொன்னணிகளின்  கிறிக்கட் சமர் இன்று (25) ஞாயிற்றுக்கிழமை கல்லடி சிவானந்தா மைதானத்தில் நடைபெற்றது.

 உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் முயற்சியால் ஆரம்பித்த இரு பெரும் பாடசாலைகளின் பொன்னணிகளின்  கிறிக்கட் சமர்
ஆரம்ப நிகழ்வு இனஞ 2025.05.25 காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகியது.

ஆன்மிக அதிதியாக இராமகிருஷ்ண மடத்தின் கல்லடி ஆச்சிரமம் தலைவர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜி கலந்துகொண்டு ஆசி வழங்கினார்.

பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் க.குணநாதன் கலந்து சிறப்பித்தார்.

திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி மற்றும் மட்டக்களப்பு வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி நிதர்சினி மகேந்திரன் குமார் ஆகியோர் மற்றும் பல அதிதிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக பாண்ட் வாத்தியம் முழங்க அதிதிகள் வரவேற்கப்பட்டனர்.

பின்னர் மைதானத்தில் அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது. பின்னர் 
போட்டி ஆரம்பமானது.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours