( வி.ரி. சகாதேவராஜா)
சர்வதேச
தந்தையர் தினத்தை முன்னிட்டு திருக்கோவில் காயத்ரி கிராமம் எஸ் வி ஓ
அமைப்பினர் தந்தையர் தினத்தை அமைப்பின் தலைவர் நந்தபாலு தலைமையில் மிகச்
சிறப்பாக கொண்டாடினார்கள்.
சமூக தரிசன நிறுவனமும் சக்தி சன சமூகநிலையமும் இந் நிகழ்வை ஏற்பாடு செய்து நேற்று நடத்தினர் .
இந்
நிகழ்விலே திருக்கோவில் காயத்ரி கிராமத்தைச் சேர்ந்த 65 வயதுக்கு மேற்பட்ட
அனைவரும் அழைக்கப்பட்டு அவர்களுக்கு ஊன்று கோல்கள் மற்றும் இனிப்பு என்பன
வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில்
எஸ்ஸ் வீ ஓ அமைப்பின் பிரதேச தலைவர் கே. பத்மநாதன் காயத்ரி கிராமத்தின்
கிராம உத்தியோகத்தர் எஸ். ஷடாட்சரன் சிறப்பு அதிதியாக கண. இராஜரத்தினம்
எஸ் சுந்தரலிங்கம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் .
இந் நிகழ்வில் ஊன்றுகோல் தேவையான முதியோர்களுக்கு ஊன்றுகோல்கள் வழங்கப்பட்டன.
Post A Comment:
0 comments so far,add yours