பாறுக் ஷிஹான்


யாழ் மாநகர சபைக்கான முதல் முஸ்லீம் பெண் பிரதிநிதியாக பாத்திமா றிஸ்லா என்ற ஆசிரியை நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண மாநகர சபையில் தனக்குக் கிடைத்த  3  (போனஸ்) பிரதிநிதிகளில் ஒன்றை, யாழ் முஸ்லிம் சமூகம் சார்பில், றிபைன் பாத்திமா றிஸ்லாக்கு தமிழரசு கட்சி வழங்கியுள்ளது.  2025 ஆம் ஆண்டு உள்ளுராட்சி தேர்தல் பற்றிய விசேட வர்த்தமானி இன்று (31) வெளியிடப்பட்டது.

 குறித்த அறிவித்தல் மூலம் நியமனம் உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ் மாநகர சபையில் தமிழ் அரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் றிஸ்லா வேட்பாளராக களமிறங்கியிருந்தார்.

யாழ் மாநகரசபைத் தேர்தலில் பட்டியல் வேட்பாளராக இடம்பெற்ற சகோதரி பாத்திமா றிஸ்லா ஆசிரியை அவர்களை இலங்கை தமிழ் அரசுக் கட்சி தமது நியமன உறுப்பினராக நியமித்துள்ளது.

இந்த நியமனத்தை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது


இதன்படி யாழ் மாநகரசபையின் முதல் பெண் பிரதிநிதியாக ஆசிரியை பாத்திமா றிஸ்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

யாழ் மாநகரசபைக்கான முதல் பெண் பிரதிநிதியாக சகோதரி பாத்திமா றிஸ்லா ஆசிரியை நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு அறியத்தருகின்றோம்.

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத்தேர்தலில் யாழ் மாநகர சபைத்தேர்தலில் பட்டியல் வேட்பாளராக இடம்பெற்ற சகோதரி பாத்திமா றிஸ்லா ஆசிரியை அவர்களை இலங்கை தமிழரசுக்கட்சி தமது நியமன உறுப்பினராக நியமித்துள்ளது.

இந்நியமனத்தை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்நியமனத்தை உறுதி செய்த கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், யாழ்ப்பாணக்கிளைத்தொகுதி தலைவர் சிறில் மற்றும் செயலாளர் ஆர்னோல்ட் ஆகியோருக்கும் யாழ் முஸ்லிம் மக்கள் சார்பாக நாம் நன்றியறிதல்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் மக்கள் மீள்குடியேற்றம் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற இச்சூழ்நிலையில் தமிழ் மக்களுடனான நல்லிணக்கச் செயற்பாடுகள் யாழ்ப்பாணத்தில் வலுவாக அமைந்திருக்கின்றன என்பதற்கு மேற்படி நியமனம் முன்னுதாரணமாகவும் எடுத்துக்காட்டாகவும் சாட்சியமாகவும் அமைந்திருக்கின்றது.

யாழ்ப்பாணம் 13ம் வட்டாரத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட சகோதரர் அப்துல்லாஹ், ஒப்பந்த அடிப்படையில் அவரோடு இணைந்து போட்டியிட்ட சகோதரர் முஹம்மது இர்பான் மற்றும் பாத்திமா றிஸ்லா ஆகியோர் யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம், சமூக நல்லிணக்கம் சார்ந்த விவகாரங்களில் இலங்கை தமிழரசுக்கட்சியை பிரதிநிதித்துவம் செய்து முற்போக்காகச் செயற்படுவார்கள் என யாழ் முஸ்லிம் மக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

நியமனம் பெற்றுள்ள சகோதரிக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம் என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் நன்றிகளை தெரிவித்துள்ளார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours