மத்திய கிழக்கு பிராந்திய வலயத்தின் பல நாடுகளின் வன்வெளிகள் மூடப்பட்டுள்ளன. தற்காலிக அடிப்படையில் பல நாடுகளின் வான்வெளிகள் இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியா, குவைட், ஜோர்தான், லெபனான், கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம், ஈராக், பஹ்ரைன் உள்ளிட்ட பல நாடுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் வான்வெளிகளை மூடுவதாகவும், விமானப் பயணங்களை வரையறுப்பதாகவும் அறிவித்துள்ளன.

இதனால் பல விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் , விமானப் பயண நேர மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.மத்திய கிழக்கில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவ முகாம்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியிருந்தது.

ஏவுணைகளைக் கொண்டு ஈராக் மற்றும் கட்டாரில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவ முகாம்களை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல் நடத்தியிருந்தது.

இந்த தாக்குதல்களினால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை. இவ்வாறான ஓர் பின்னணியில் பல நாடுகள் தங்களது வான் பரப்புக்களை மூடுவதாக அறிவித்துள்ளன. 

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours