மட்டக்களப்பு
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு
தலைமையில் பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் வழிநடத்தலில் 26.06.2025 வெள்ளி
கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக்
கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன்,வைத்தியர் சிறிநாத் பிரதேச சபை
தவிசாளர் பிரதேச சபை உறுப்பினர்கள் திணைக்களத்தின் தலைவர்கள், கிராம சேவை
உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இக்
கூட்டத்தின் போது சென்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கூட்டத்தில்
எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும் நிறை வேற்றப்பட்டனவா என மீளாய்வு
செய்யப்பட்டது.
அந்த
வகையில் கல்வி, சுகாதாரம், நீர்ப்பாசனம், நீர் வழங்கல், விவசாயம்,
மின்சாரம், வீதி அபிவிருத்தி, போன்ற விடயங்கள் தொடர்பாக ஒவ்வொன்றாக இக்
கூட்டத்தில் விரிவாக மீளாய்வு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஓந்தாச்சிமடம் விநாயகர் வித்தியாலயத்திற்கு நெற் சந்தைப்படுத்தல் கட்டிடத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், பிரதேச சபை கழிவகற்றலுக்காக மேலதிக இடங்களை தேர்ந்தெடுத்தல், குறைந்த தூரத்தில் காணப்படும் கிராமத்தின் உள்ளக பகுதிகளுக்கு நீர்வழங்கல் நடவடிக்கையை மேற் கொள்ளல், கோட்டைக்காலாறு மகா வித்தியாலயதில் உள்ளக மைதானத்தை அமைத்தல் , களுவாஞ்சிகுடி, செட்டிபாளையம் வைத்தியசாலைகளுக்கு தேவையான வைத்திய உபகரணங்களைப் பெற்றுக் கொடுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது .......பழுகாம் நிருபர்
Post A Comment:
0 comments so far,add yours