பாறுக் ஷிஹான்
 
நிந்தவூர்  பொலிஸ் நிலையத்தின் புதிய நிலைய பொறுப்பதிகாரியாக  பொலிஸ் பரிசோதகர் ஏ.டபிள்யு.எஸ்.  நிசாந்த வெதகே இன்று (12 )  நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் தனது கடமையினைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் 16 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு   உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.

இதற்கமைய நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ. எம் .நஜீம் பொலன்னறுவை பொலிஸ் நிலையத்திற்கும் பன்சியகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிந்தவூர் பொலிஸ் நிலையத்திற்கும் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours