(அஸ்லம் எஸ்.மெளலானா)
கிழக்கு மாகாண ஆழ்கடலில் மீனவர்கள் பயன்படுத்தும் வலைகளும், மீன்களும் கொள்ளையடிக்கப்படும் சம்பவங்களை தடுக்கக் கோரி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் பாராளுமன்றத்தில் இன்று
தனி நபர் பிரேரணை ஒன்றைக் கொண்டு வருகிறார்.
இந்த பிரேரணையின் மூலம், கடற்பரப்பில் இடம்பெறும் கொள்ளைகளை தடுக்கும் நோக்கில் கடற்படைகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தப்படுவதோடு, இதற்கு முந்தைய மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
மேலும், இது சம்பந்தமாக பாதுகாப்பு அமைச்சர் உத்தரவாதம் வழங்க வேண்டும் எனவும் கோரப்படுகிறது.
குறித்த பிரேரணையை பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் ஆமோதித்து உரையாற்றுகிறார்.

Post A Comment:
0 comments so far,add yours