எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் போதைப்பொருள் முத்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான தெளிவூட்டற் செயவர்வொன்று (24) மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி.ஜெஸ்டினா முரளிதரன் தலைமையில் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற குறித்த செயலமர்வினை மாவட்ட போதைப்பொருள் முத்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவின் மாவட்ட இணைப்பாளர் ப.தினேஸ் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

மது சார பாவனையால்  ஏற்படும் உடல் நல குறைபாடு மற்றும் குடும்ப நல பாதிப்பு ஆகியவற்றினால் ஏற்படும் பாதிப்புக்கள், சமூகப் பாதிப்புக்கள், பொருளாதார பிரச்சனை, சிறுவர்களை போதைப்பொருள் பாவனையில் இருந்து பாதுகாத்தல், போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளை எவ்வாறு முன்னெடுத்தல் போன்ற பல விடையங்கள் தொடர்பாக இதன் போது விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

குறித்த செயலமர்வினை மாவட்ட செயலகத்துடன் இணைந்து மது சாரம் மறும்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் ஏற்பாடு செய்திருந்ததுடன், செயலமர்வின் வளவாளர்களாக மது சாரம் மறும்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் பிரதான வளவாளர்
ஏ.சீ.எம்.ரஹீம் கலந்து கொண்ட வளவாண்மை மேற்கொண்டிருந்ததுடன், சிரேஸ்ட நிகழ்ச்சித் திட்ட அதிகாரி திருமதி.நிதர்சனா அவர்களும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.

இந்த செயலமர்வில் மாவட்ட செயலக அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில்
மண்முனை மேற்கு - வவுணதீவு,
கோறளைப்பற்று - வாழைச்சேனன்,
பட்டிப்பளை - கொக்கட்டிச்சோலை,
மண்முனை வடக்கு ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் தேர்ந்து எடுக்கப்பட்ட 4 கிராமங்களில் போதைப்பொருள் அற்ற மாதிரிக் கிராமத்தினை உருவாக்கும் திட்டமொன்று மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ளமை தொடர்பாக இதன் போது அதிகாரிகளை தெளிவுபடுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours