(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் வழமைபோன்று இம்முறையும் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை இடம்பெற்றது.
ஆண்கள் மற்றும் பெண்கள் என
ஒரே தடவையில், குறிக்கப்பட்ட உரிய நேரத்தில் மாவடிப்பள்ளி ஸஃது அரபுக் கல்லூரியின் அதிபர் யூ.எல்.எம். முபாறக் (ஹாசிமி)யினால் தொழுகையும் துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.
இதன்போது அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினரும், தேசிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா உட்பட சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட நம்பிக்கையாளர் சபையின் உறுப்பினர்கள், ஜமாஅத்தார்கள், பெண்கள் உட்பட சிறுவர்களும் தொழுகையில் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours