இ.சுதாகரன்

மண்முனை தென்எருவில் பற்று களுதாவளை பிரதேச சபையின் தவிசாளர் வினோராஜ் மற்றும் பிரதித்தவிசாளர் ஆகியோரை வரவேற்றலும் துறைநீலாவணை அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் துறைநீலாவணை பொது நூலகத்தில் துறைநீலாவணை வட்டார பிரதேச சபை உறுப்பினர் சுந்தரலிங்கம் இளமாறன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் பிரமுகர்கள்இபொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்இபொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது துறைநீலாவணைக் கிராமத்தின் பல தேவைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.குறிப்பாக துறைநீலாவணை பொதுமயானத்தினை எல்லைப்படுத்தல் பொதுச்சந்தைக் கட்டிடம் புனரமைப்பு வீதிப்புனரமைப்புஇதெருவிளக்கு பொருத்துதல் துறைநீலாவணை பிரதான வீதியில் கழிவுகள் வீசப்படுவதனைத் தவித்தல் இரவு வேளைகளில் வீதிகளில் நடமாடும் மாடுகள் தொடர்பாக சட்ட ரீதியான நடவெடிக்கையினை முன்னெடுத்தல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இது தொடர்பான கோரிக்கைகளுக்கு விரைவாக தீர்வு பெற்றுத்தருவதாக தவிசாளர் வாக்குறுதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours