மட்டக்களப்பு - மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக் கட்சியை தோற்கடிப்பதற்காக முயற்சி எடுக்கப்படுவதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நேற்று களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

தென் எருவில்பற்று பிரதேச சபை

தென் எருவில்பற்று பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக் கட்சியை தோற்கடிப்பதற்காக தேசிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் இணைந்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி செயற்பட்டுள்ளதாக சாணக்கியன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் ஈபிடிபியை சந்தித்தற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட பலர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர். 

இந்நிலையில் நேற்று, கஜேந்திரகுமாருடன் கைகோர்த்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுடனும் தேசிய மக்கள் சக்தியுடனும் இணைந்து தவிசாளர் ஒருவரை கொண்டுவருவதற்கு ஆதரவினை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours