க.விஜயரெத்தினம்
வவுணதீவு பிரதேசத்தில் சட்ட விரோத மண் அகழ்வு,கசிப்பு உற்பத்தி போன்றவற்றை பொதுமக்களின் பங்களிப்புடன் தடுத்துநிறுத்தி கட்டாக்காலி மாடுகளின் தொல்லைக்கு தீர்வுகண்டு வவுணதீவு பிரதேசத்தை வளம்கொளிக்கும் பிரதேசமாக மாற்றியமைப்பேன் என வவுணதீவு பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட புதிய தவிசாளர் த.கோபாலப்பிள்ளை தெரிவித்தார்.
மட்டக்களப்பு, மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச சபைக்கான தவிசாளராக தம்பிப்பிள்ளை-கோபாலப்பிள்ளை நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை(2) பதவியேற்றுக் கொண்டார்.
இவர் வவுணதீவு பிரதேசத்தில் விளாவெட்டுவான் கிராமத்தில் பிறந்து வளர்ந்து உள்ளுராட்சி மன்ற தேர்தலில் விளாவெட்டுவான் வட்டாராத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியில் போட்டியிட்டு 1020 வாக்குகளை பெற்றுக்கொண்டு தற்போது தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இங்கு 10 வட்டாரங்களில் தமிழரசுக்கட்சி வெற்றிபெற்று தனித்துவமான ஆட்சியமைக்க வித்திட்டது.இப்பிரதேச சபைத்தேர்தலில் தேசியமக்கள் சக்தி 3 ஆசனங்களையும்,படகு 3 ஆசனங்களையும்,சைக்கிள்,சங்கு தலா ஒரு ஆசனங்களையும் பெற்றிருந்தது.பல வருடங்கள் அதிபராக இருந்து கல்விக்கு ஊக்கமளித்து பலபேரை புத்திஜீவிகளாக மாற்றிய பங்கு இவருக்குண்டு.
இவர் இலங்கை தமிழரசுக்கட்சியில் 30 வருடங்களாக உறுப்பினராகவும்,14 வருடங்கள் மட்டக்களப்பு தொகுதி தலைவராகவும்,7வருடங்கள் வவுணதீவு பிரதேச தலைவராகவும் இருந்து கட்சிக்காக உழைத்தவர்.அதுமட்டுமல்லாமல் வவுணதீவுக்கு நிறுவப்படவுள்ள 6 மதுபானசாலை அனுமதிப்பத்திரம் வேண்டாமென்று மக்களுடன் மக்களாக போராடி மதுபானசாலையை நிறுவதை தடுத்தலில் முக்கிய பங்காற்றியவர்.
வவுணதீவுப் பிரதேசத்தில் சட்டவிரோத மண் அகழ்வு,கசிப்பு தயாரிப்பு,மற்றும் கட்டாக்காலி மாடுகளின் தொல்லை,குப்பை பிரச்சனை,பாலம் புனரமைத்தல் போன்றவற்று தனது ஆட்சிக்காலத்தில் தீர்வுகண்டு வவுணதீவு பிரதேசத்தை வளம்கொளிக்கும் பிரதேசமாக மாற்றியமைப்பேன் என பதவியேற்றவேளை தெரிவித்தார்.
இதேவேளை பிரதி தவிசாளராக கன்னங்குடாவைச் சேர்ந்த த.டிசாந் தெரிவு செய்யப்பட்டு இத்தினத்தில் அவரும் பதவியேற்றுக் கொண்டார்.
பதவியேற்பு நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து ஶ்ரீநேசன், பிரதேச சபை செயலாளர் பீ.கோகுலன்,
பிரேதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours