வரலாற்றுப்
பிரசித்தி பெற்ற உகந்தைமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இம்
மாதம் 25ஆம் தேதி கொடியேற்ற நிகழ்வுடன் ஆரம்பமாகின்றது என்று ஆலய
வண்ணக்கர் சுதுநிலமே திஸாநாயக்க சுதா தெரிவித்தார்.
உகந்தை
மலை ஸ்ரீ முருகன் ஆலய கொடியேற்றம் இம் மாதம் 25 ஆம் தேதி ஆலயபிரதம குரு
சிவசிறி க.கு.சீதாராம் குருக்கள் தலைமையில் நடைபெற இருக்கின்றது.
கொடியேற்றம்
தொடங்கி தொடர்ச்சியாக16 நாட்கள் திருவிழாக்கள் இடம்பெற்று எதிர்வரும்
ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி சமுத்திரத்தில் தீர்த்த உற்சவம் இடம் பெறும்.
உற்சவ காலங்களில் போக்குவரத்து மற்றும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


Post A Comment:
0 comments so far,add yours