பட்டிருப்பு கல்விவலயத்திற்குட்பட்ட துறைநீலாவணை மெதடிஸ்தன் மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலையின் புதிய அதிபராக ஆசிரிய ஆலோசகர் ஆ.மதியழகன் பட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர்  எஸ்.சிறிதரன் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதிபராக கடமையாற்றிய எஸ்.கிருபைராசா துறைநீலாவணை மகாவித்தியாலயத்திற்கு நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து நேர்முகத்தேர்வு நடாத்தி அதிபர் தரத்தில் ஒருவர் நியமிக்கும் வரை இவர் வலயக்கல்விப்பணிப்பாளரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

துறைநீலாவணையினைச் சேர்ந்த இவர் கலைப் பட்டதாரியாக இருப்பதுடன் உயர்தர மாணவர்களுக்கு அரசியல் விஞ்ஞானம் கற்பிக்கும் சிறந்த ஒருஆசிரியராகத் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது 


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours