இ.சுதாகரன்

இலங்கை அரசாங்கத்தினால் தேசிய ரீதியாக முன்னெடுக்கப்படுகின்ற தூய்மையான இலங்கையினை கட்டியெழுப்பும் நோக்கினால் ஒரு நாள்  செயற்றிட்டத்தினை பாடசாலைகள்இ பிரிவெனாக்கள்இகல்வியற் கல்லூரிகளில் நடைமுறைப்படுத்துவதற்கான வெளிப்படுத்தல் செயற்றிட்டமானது இன்றைய தினம் (9) தேசிய ரீதியாக முன்னெடுக்கப்படும் நிலையில் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டைக் கல்லாறு கல்முந்தல் திருவள்ளுவர் வித்தியாலயத்தில் பாடசாலை முதல்வர் பூ. அரசரெத்தினம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் மண்முனை தென்  எருவில்பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தின் சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் எஸ்.புவிதரன் மற்றும் பாடசாலை அபிவிருத்திச சங்கத்தின் செயலாளர் எஸ்.சுவர்ணராஜா மற்றும் ஆசிரியர்கள்இமாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது பாடசாலை வளாகம் முழுமையாக துப்பரவு செய்யப்பட்டதுடன் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் தொடர்பான காணொளிகள்இவிழிப்பூட்டல் வீதி நாடகம்இமரம் நடுகைஇ செயற்றிட்டம் தொடர்பான விடயங்கள் தெளிவூட்டல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours