சம்மாந்துறை
பிரதேச சபையின்தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர்
பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரக்கிடையிலான சினேகபூர்வ சந்திப்பு, இன்று
(3)வியாழக்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கடந்த திங்கட்கிழமை பதவியேற்ற பின்னர், முதலாவது முறையாக கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்த தவிசாளர்,
சம்மாந்துறை
பிரதேசத்தின் பிரச்சினைகள், தேவைப்பாடுகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள்
தொடர்பில் விரிவான சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.
இச்சந்திப்பு, பிரதேச அபிவிருத்திக்கான புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை அதிகரிக்கும் வகையில் நடைபெற்றது.
Post A Comment:
0 comments so far,add yours