(  வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்று பிரசித்தி பெற்ற  நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் ஆடிப்பூர திருவிழா நேற்று ( 28) திங்கட்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது .

ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் முன்னிலையில் ஆலய குரு சிவ ஸ்ரீ ச.கோவர்த்தன சர்மா வழிகாட்டலில் குரு அகிலன் ஜயாவின் பூஜையுடன் ஆடிப்பூரத் திருவிழா நடைபெற்றது.

 ஆலய பரிபாலன சபை தலைவர்  கே.ஜெயசிறில்  தெரிவிக்கையில் அம்மனுக்கு உரிய இந் நன்நாளில் எமது ஆலயத்தில் இரண்டாவது தடவையாக ஆடிப்பூரம் அனுஷ்டிக்க பட்டுள்ளது. ஏராளமான பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர். என்று தெரிவித்தார் .

ஆலய பரிபாலன சபை ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா  ஆடிப்பூரம் பற்றிய சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்.

இதேவேளை.நேற்று  (28)  திங்கட்கிழமை நாக சதுர்த்தி விசேட பூஜையும் அங்கு இடம் பெற்றது.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours