( வி.ரி. சகாதேவராஜா)

 வரலாற்று பிரசித்தி பெற்ற 
திருக்கோவில்  ஶ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய ஆடி அமாவாசை உற்சவம் தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  நேற்று  (30)திங்கட்கிழமை   திருக்கோவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

திருக்கோவில்  ஶ்ரீ சித்திரவேலாயுத சுவாமிஆலய ஆடி உற்சவமானது எதிர்வரும் 2025.07.07கொடிஏற்றத்துடன் ஆரம்பித்து 2025.07.26ம் திகதி தீர்த்தோற்சவம் இடம்பெற உள்ளது.

இக்காலபகுதியில் ஆலயத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய நலன்புரி சேவைகள் தொடர்பாக திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள அணைத்து நிறுவனங்களினதும் பிரதிநிதிகளையும் உள்ளடக்கி பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

இவ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆலயத் தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ், திருக்கோவில் பிரதேச சபை  தவிசாளர் சு.சசிகுமார் ,பதில் உதவி பிரதேச செயலாளர் ரெட்ணம் சுவாகர்,திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி.,திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி உத்தியோகத்தர்கள்,திருக்கோவில் வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள்,கிராம சேவைக்கு பொறுப்பான நிருவாக உத்தியோகத்தர்  எஸ்.சுயகுமார், மற்றும் திருக்கோவில்  ஶ்ரீ சித்திரவேலாயுத சுவாமிஆலய நிருவாகசபை உறுப்பினர்கள் திருக்கோவில் பிரதேச திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் அதன் உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours