பட்டிருப்பு கல்விவலயத்திற்குட்பட்ட பெரியகல்லாறு புனித அருளானந்தர் வித்தியாலயத்தின் 75 வது ஆண்டு நிறைவு விழா  30 ஆம் திகதி ஞயிற்றுக்கிழமை பழையமாணவர்களது ஏற்பாட்டிலும் அதிபர் வி.புவிவண்ணன் தலைமையில் தடம் அறக்கட்டளை அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் சமூகசேவகர் இ.நிறஞ்சன் அவர்களது நிதி அனுசரணையுடன் இடம்பெற்றது.

இதில் இப்பாடசாலையில் கல்விகற்ற பழையமாணவர்களது நடைபவனி மற்றும் வாகனப் பேரணி  இடம்பெற்றது

இந்நிகழ்வுக்கான அனுசரணையாளராக விளங்கும் அவுஸ்ரேலியாவில் வசிக்கும் இ.நிறஞசன் அவர்கள் தனது தாயின் நினைவாக தடம் ' எனும் அறகட்டளை நிறுவனத்தை ஸ்தாபித்து நீண்ட நாட்களாக சமூக பணியினை தனது சொந்த நிதியில் இலவசமாக செய்து வருகின்றார் .

தனது தடத்தின் ஊடாக ....தனது பெரியகல்லாறு  கிராமத்தில் நீண்ட காலமாக மரணம் நிகளும் அனைத்து மரண வீடுகளுக்கும் அங்கு தேவையான குடிநீர் போத்தல்கள் அத்தோடு 5000 உதவி தொகை அங்கு தேவைப்படும் கொட்டகைகள் மற்றும் கதிரைகள்  என அனைத்தையும் இலவசமாக  வழங்கி வருகின்றார் .

 ⁠வறுமை கேட்டில் உள்ள குறிப்பாக பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை இலவசமாக செய்து வருகின்றார் 

 ⁠வறுமையான நோய்வாய் பட்ட உறவுகளுக்கு  சிகிச்சைக்கு உதவுவதோடு உதவி தொகையும் இவரால் வழங்கி வைக்கப் படுகின்றது. 

 ⁠வறிய பாடசாலை மாணவர்களுக்கு வருடம் தோறும் தேவையான கற்றல் உபகரணங்களையும் சில தேவையுள்ள மாணவர்களுக்கு படிப்பிற்கான அனைத்து கொடுப்பனவுகளையும் தடம் அறக்கட்டளை மூலம் செய்து வருகின்றார் .

சமூகசேவகர் இ.நிறஞ்சன் நிதி அனுசரணை

⁠பிரபல்யமான ஆலய உற்சவங்களின் போது அங்கு கலந்து கொள்ளும் அனைத்து பக்தர்களுக்கும் தனது தடம் அமைப்பின் ஊடாக இலவசமா குடிநீர் போத்த;ல்களை வழங்கி வைத்து வருகின்றார் .

 ⁠இவர் தனது ' தடம் ' அமைப்பின் ஊடாக  தனது கிராமம் மட்டுமன்றி அயல் கிராம மக்களுக்கும் பொது நலத்துடன்  பாரிய சேவையை தனது சொந்த நிதியில் பிரதேசம் தாண்டி மாவட்ட ரீதியாக செய்து வருகின்றமை எமது பிரதேசத்திற்கு கிடைத்த ஒரு பொக்கிசமாகும். 

 ⁠பெரிய கல்லாற்றில் தரம் - 5 புலமை பரீட்சை பரீட்சையில் சித்தியடைகின்ற அனைத்து மாணவர்களுக்கும் வங்கியில் 5000 பணம் வைப்பும் பரிசில்களும்  தொடர்ச்சியாக  வழங்கி வருகின்றார் .

தற்போது புனித அருளானந்தர் வித்தியாலயம் பல வளப் பற்றாக்குறையுடன் மூடும் நிலையில் இருந்தது நிறஞ்சன் அவர்களது முயற்சியால் தற்போது முன்னேற்றம் கண்டுள்ளது. 

 இச்சேவையினை சிறப்பாகச் செய்துவரும் நிறஞ்சன் அவர்களுக்கு பல்வேறு மட்டங்களில் இருந்து பாராட்டுக்களும் நன்றிகளும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது








Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours