\


தடம் அறக்கட்டளை அமைப்பால் தாந்தா முருகன் ஆலய பாத யாத்திரை மேற்கொள்ளும் அடியவர்களுக்கு தண்ணீர்ப் போத்தல்கள் வழங்கி வைப்பு

தமிழ் தேசிய உணர்வாளன் பெரியகல்லாற்றை சேர்ந்த அவுஸ்திரேலியா வாழ் நிரஞ்சன்  தனது தாயின் நினைவாக " தடம் " அறக்கட்டளை எனும் அமைப்பை உருவாக்கி அதன் ஊடாக பல சமூக சேவையினை செய்து வருகின்றார்.

இன்றைய தினம் வியாக்கிழமை ( 07.08. 2025  ) தாந்தாமலை சிறி முருகன் ஆலயம் நோக்கி பாதபாத்திரை வரும் பத்தர்களுக்கு 5 ஆயிரம்  தண்ணீர் போத்தல்கள்  விநியோகம்  செய்தார் .
இது மட்டுமன்றி இவர்   தனது ஊரில் மரணம் ஏற்படும்  வீடுகளுக்கு போதியளவு குடிநீர் , உதவிகள், பண தொகை 5000/= அத்தோடு கொட்டகைகள் , கதிரைகளையும் போன்றவற்றையும் இலவசமாக நீண்ட காலமாக தொடர்ச்சியாக வழங்கி வருகின்றார.அத்தோடு  தனது " தடம் " அமைப்பின் ஊடாக  தரம் - 5 மாணவர்களுக்கான உதவி தொகை வழங்குதல் , வாழ்வாதார உதவிகள் , வறிய மாணவர்களுக்கு கல்விக்கான கொடுப்பனவுகள் , வறிய நோயுற்றவர்களுக்கான மருத்துவ உதவிகள் என பல உதவிகளைச்  செய்து வருகின்றமையும் குறிப்பிட தக்கதாகும்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours