(சுமன்)



மன்னாரில் இல்மனைட் மண் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெறுகின்ற இளையோரின் போராட்டமான "கருநிலம்" போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நேற்றைய தினம் திருக்கோணமலை பிரதான கடற்கரையில் 'தளம் சூழலியல் குழுமம்' ஒருங்கிணைப்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 

இதன் போது திருக்கோணமலையை சேர்ந்த பல்வேறு சமூக செயற்பாட்டாளர்களும், நலன் விரும்பிகளும், சூழலியல் ஆர்வலர்களும், தளம் சூழலியல் குழுமத்தின் அங்கத்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர். 

மன்னார் இளையோரின் போராட்டத்திற்கு தார்மீக ஆதரவையும், வளச்சுரண்டலுக்கு எதிரான எதிர்ப்பையும், சூழலியல் பாதுகாப்பையும் வெளிப்படுத்தும் நோக்குடன் இந்த கவனயீர்ப்பு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours