சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக்கிளையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வாகரை பிரதேசசெயலகப்பிரிவுக்குட்பட்ட குஞ்சன்கல்குளப் பிரதேசத்தில் வாழும் பழங்குடி மக்களுக்கு ஒருதொகுதி உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தலைவர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில் இடம்பெற்றது.

சுவிஸ் நாட்டில் வசித்து அகால மரணமடைந்த நல்லையா பிறமதாசன் (கண்ணன்) அவர்களது ஞாபகார்த்தமாக சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் தலைவர் சுதர்சன் அவர்களது பிள்ளைகளான தர்சன் மற்றும் தர்சினி அவர்களது நிதி உதவி மூலம் இவ் உதவித்திட்டம் முன்னெடுக்கப்பட்டது

இந்நிகழ்வில் சுவிஸ் உதயம் அமைப்பின் செயலாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன்  பிரதித் தலைவர் கணவரதராஜன் பொருளாளர் ம.கருஸ்ராஜ் உபசெயலாளரும் ஊடகவியலாளருமான சா.நடனசபேசன் உறுப்பினர்களான கண்ணன் கிராம உத்தியோகத்தர் கஜன் மற்றும் லேகான் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்

தொடர்ச்சியாக கல்வி மற்றும் வாழ்வாதார உதவிகளை சுவிஸ் உதயம் அமைப்பு தொடர்ச்சியாகச் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது















Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours