( வி.ரி.சகாதேவராஜா)

வரலாற்று பிரசித்தி பெற்ற " சின்னக் கதிர்காமம்" என அழைக்கப்படும் மண்டூர் ஸ்ரீ முருகன் ஆலயத்துக்கான வருடாந்த பாதயாத்திரை நாளை (30) சனிக்கிழமை காரைதீவிலிருந்து நடைபெற இருக்கிறது .

காரைதீவில்  மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து அதிகாலை நான்கு மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் பாதயாத்திரை ஆரம்பமாகும்.

காரைதீவு இந்து சமய விருத்திச்சங்கம் இந்த பாரிய பாதயாத்திரையை வருடாந்தம் நடத்தி வருகிறது.

காரைதீவிலிருந்து அதிகாலை 4. 00 மணிக்கு புறப்படும் பாதயாத்திரை கல்முனை, நற்பிட்டிமுனை , சேனைக்குடியிருப்பு, கிட்டங்கி, நாவிதன்வெளி, வேப்பையடி, தம்பலவத்தை ஊடாக மண்டூரைச் சென்றடையும்.

தம்பலவத்தையில் பிரபல சட்டத்தரணி நடராசா சிவரஞ்சித்தின் அன்னதான நிகழ்வு வழமைபோல் இம் முறையும் இடம்பெறவிருக்கிறது.

வரலாற்று பிரசித்தி பெற்ற " சின்னக் கதிர்காமம்" என அழைக்கப்படும் மண்டூர் ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. எதிர்வரும் செப்டம்பர் 07ஆம் தேதி  தீர்த்தோற்சவத்துடன் நிறைவடைய விருக்கிறது குறிப்பிடத்தக்கது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours