சா.நடனசபேசன்



குருமண்வெளியைப் பிறப்பிடமாகவும் துறைநீலாவணையினை வதிவிடமாகக்கொண்ட சோமசுந்தரம் செல்வம் அதிபர் இலங்கை கல்வி நிருவாகசேவைப்பரீட்சையில் சித்தியடைந்து கல்வி நிருவாகசேவைக்குத் தெரிவாகியுள்ளார்.

இவர் ஆரம்பக்கல்வியினை குருமண்வெளி சிவசக்தி மகாவித்தியாலயத்திலும் உயர்தரத்தினைப் பட்டிருப்புத் தேசியபாடசாலையிலும் கற்று கல்விக்கல்லூரிக்குத் தெரிவுசெய்யப்பட்டு ஆசிரியராக முதல் நியமனம் 2003.07.03 திகதி  விவிலை தமிழ் கனிஷ்ரவித்தியாலயத்தில் நியமிக்கப்பட்டு பின்னர் துறைநீலாவணை மகாவித்தியாலயத்தில் ஆசிரியராகவும் அதனைத்தொடர்ந்து அதிபர் சேவையில் சித்தியடைந்து துறைநீலாவணை மகாவித்தியாலயத்தில் பிரதி அதிபர் பின்னர் சித்திவிநாயகர்வித்தியாலயம் மற்றும் குருமண்வெளி சிவசக்தி மகாவித்தியாலயத்திலும் அதிபராக கடமையாற்றிய நிலையில் கல்வி நிர்வாகசேவைக்குத் தெரிவாகியுள்ளார்.இவர் கலைப்பட்டதாரி மற்றும் முதுமானி, கல்வி முதுமானி ,பட்டப்பின் கல்வி டிப்ளோமா ஆகிய பட்டங்களைப் பெற்று இருப்பதுடன் தமிழ் உரைநடை ஒளி காமராஜர் பல்கலைக்கழகம் இந்தியாவில்

16 வது அகில உலகத் தமிழ் உரைநடை ஆராய்ச்சி மகாநாட்டில்கலந்துகொண்டு உரை நடைகளுக்கெல்லாம் அடிக்காலாக அமைந்தவர் ஆறுமுக நாவலர் என்ற ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்து கௌரவப்பட்டம் பெற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours