பாறுக் ஷிஹான் 

திருக்கோவில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம்  வியாழக்கிழமை (14)திருக்கோவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது

அம்பாறை மாவட்ட திருக்கோவில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பிரதேச செயலாளர் டீ. கஜேந்திரன்   ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாஸித், திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் எஸ். எஸ். சசிகுமார், உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோத்தர்கள் முப்படையினர் திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் பொது அமைப்புக்களின் தலைவர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரத்தியோக செயலாளர்கள் எனப்பலரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.









Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours