( வி.ரி.சகாதேவராஜா)

வரலாற்று பிரசித்தி பெற்ற கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயம், சமுதாயத்தில் மிகவும் வசதி குறைந்த குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக,  ஆலயத்திற்கு நேர்த்தியாக கிடைக்கும் பசு மாடுகளை கட்டம் கட்டமாக இலவசமாக வழங்கி வருகிறது.

குடும்பத்திற்கு ஒரு பசு வழங்கும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக நான்காம் கட்டமாக   அப்பகுதியில் இருந்து ஆறு (06) பேர்  பிரதேச செயலாளர்கள் ஊடாக தெரிவு செய்யப்பட்ட ஆறு (06) பயனாளிகளுக்கும்  பசு வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று  (24) ஞாயிற்றுக்கிழமை மிகச் சிறப்பான முறையில் ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய முன்றலில் இடம் பெற்றது. 

இந் நிகழ்வில் ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய  தலைவர் இ.மேகராசா( அதிபர் )வண்ணக்கர்கள், செயலாளர் பொருளாளர்,தேச மகாசபை உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.










Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours