(அஸ்லம் எஸ்.மெளலானா)



நாளை புதன்கிழமை நடைபெறவிருந்த பொது நிர்வாக அமைச்சின் ஆலோசனைக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக அறிய முடிகிறது.

கல்முனை விவகாரமும் ஆராயப்படவிருந்த இக்கூட்டத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் கலந்து கொள்ளாத நிலையில் அது நடத்தப்படக் கூடாது என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் கரியப்பர் அவர்கள், கடந்த வியாழக்கிழமை துறைசார் அமைச்சர் மற்றும் பாராளுமன்ற சபாநாயகர் ஆகியோரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அத்துடன், குறித்த ஆலோசனைக் குழுவில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள கல்முனை உப செயலக விவகாரம் தொடர்பாக தற்போது நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவ்வழக்குகளில் சம்பந்தப்பட்ட தரப்புகள் அழைக்கப்படாமல் கூட்டம் நடத்தப்படுவது உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்கும் நிர்வாக நியாயத்திற்கும் முரணானது எனவும் நிசாம் காரியப்பர் எம்.பி வலியுறுத்தியிருந்தார்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours